திருப்பூர் மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி, திருப்பூர் மாநகரில் காலியாக
உள்ள ஊர்க்காவல்படை ஆளினர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.
ஊர்க்காவல்படை ஆளினர் பணிக்கான விண்ணப்பங்கள் குமரன் ரோடு வடக்கு காவல் நிலைய வளாகம் பின்புறம் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்கவேண்டும்.
1. பத்தாம்வகுப்பு (SSLC) கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும்.
2. 20 வயதுக்கு மேர்ப்பட்டவராகவும், 45 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
3. திருப்பூர் மாநகர எல்லைக்குள் வசிப்பராக இருக்க வேண்டும்.
4. நல்ல உடல்நலத் தகுதியுடன் இருக்கவேண்டும்.
மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 30.11.2020 க்குள்
விண்ணப்பிக்கவேண்டும். 30.11.2020 க்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக
ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.