சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு அனுப்பபட்டுள்ளது.
அதில், கொரோனா கால ஊரடங்கு தளர்த்தபட்டு திருப்பூர் பின்னலாடை தொழில் சுமார் நான்கு மாதங்களாக இயங்கி வருகிறது. பொங்கலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் பல நூறு பேர் பின்னலாடை பணிக்கும், பல்வேறு வேலை சார்பாகவும் தினமும் திருப்பூர் சென்று வர வேண்டியுள்ளது. இந்நிலையில் பொங்கலூர் பகுதி வழியாக முன்பு இயங்கி வந்த பொது போக்குவரத்து ஊரடங்கிற்கு பின் இன்னும் தொடங்கப்படவில்லை.
அதனால் தினமும் திருப்பூர் செல்லவோர்க்கு சிரமமாக உள்ளது. பெண்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, பொங்கலூர் பகுதி பேருந்துகளான 28, 28A, 41, 22 ஆகியவற்றை குறைந்தபட்சம் பணிக்கு சென்று திரும்ப காலை மற்றும் மாலை வேளைகளிளாவது இயங்குமாறு உடனே ஏற்பாடு செய்ய வேண்டுமென மன்ற தலைவர் கருப்புசாமி, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பாலாஜி ஆகியோரால் அனுப்பபட்டுள்ளது.